Google தனியுரிமை மேலோட்டப்பார்வை
நோக்கம்
இந்த அறிக்கை Google இன் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் உலகெங்கும் உள்ள அதன் தளங்கள் போன்றவற்றுக்கு பொருந்தும்(மொத்தமாக, Google இன் “சேவைகள்”). நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட விவரம் மற்றும் பிற தரவு
- ஒரு Google சேவைக்காக நீங்கள் பதிவு செய்யும்போது அல்லது தானாக முன்வந்து அந்த விவரங்களை அளிக்கும்போது Google தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கிறது. உங்களிடமிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட விவரங்களை பிற Google சேவைகளில் உள்ள தகவல்களுடன் ஒருங்கிணைப்போம் அல்லது மூன்றாம் தரப்புகளில் உங்களுக்கென உள்ளடக்கத்தைத் தனிபயனாக்குவது போன்றவற்றையும் சேர்த்து இன்னும் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குகிறது.
- உங்களுடைய ஆன்லைன் அனுபவத்தை மெருகூட்டவும் நீங்கள் Google சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்து அதன் தரத்தை மேம்படுத்தவும் Google குக்கீகளையும் பிற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது.
- எங்களுடைய வலைத்தளங்களுக்கு வரும்போது அல்லது எங்கள் தயாரிப்புகளில் எதையாவது பயன்படுத்தும் போது Google சர்வர்கள் தானாகவே URL, IP முகவரி, உலாவி வகை, உங்கள் கோரிக்கையின் தேதி மற்றும் நேரம் போன்ற தகவல்களைப் பதிவு செய்கிறது.
- முழு தனியுரிமைக் கொள்கையில் மேலும் அறிக.
பயன்கள்
- தனிப்பயனாக்கிய உள்ளடக்கம் மற்றும் விளம்பரத்தைக் காண்பிக்கும் சேவைகள் உள்பட, நீங்கள் கோரிய பல சேவைகளை வழங்குவதற்கு தனிப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துவோம்.
- Google தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை இயக்குவதற்கு மற்றும் மேம்படுத்தும் பொருட்டு, கணக்குத் தணிக்கை, ஆய்வு மற்றும் பகுப்பாய்வை மேற்கொள்வதற்காகவும் தனிப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துவோம்.
- Google அல்லாத மூன்றாம் தரப்பினருடன், திரட்டப்பட்ட தனிப்படுத்தப்படாத தகவலை நாங்கள் பகிர்வோம்.
- உங்கள் தனிப்பட்ட தகவலை செயலாக்குவதற்கு உதவும் பொருட்டு மூன்றாம் தரப்பினரை நாங்கள் பயன்படுத்தும் போது, எங்கள் தனியுரிமைக் கொள்கை மற்றும் முறையான ரகசியத் தன்மை மற்றும் பாதுகாப்பு அளவீடுகளுடன் இணங்க வேண்டும் என அவர்களை வலியுறுத்துவோம்.
- சட்டப்பூர்வ செயலாக்கத்துடன் இணங்கும் வகையில், முறைகேடு அல்லது கெடுதலைத் தடுப்பதுடன், எமது நெட்வொர்க் மற்றும் சேவைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சில நேரங்களில் மூன்றாம் தரப்பினருடன் தகவலைப் பகிருவோம்.
- அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில், சொந்த சேவையகங்களில் தனிப்பட்ட தகவலை Google செயலாக்கம் செய்கிறது. சில நேரங்களில் உங்கள் நாட்டிற்கு வெளியே உள்ள சேவையகங்கள் மூலமாகவும் தனிப்பட்ட தகவலை செயலாக்கம் செய்வோம்.
- மேலும் அறிக.
உங்கள் விருப்பத்தேர்வுகள்
- நியாயமான காரணங்களுக்காக தேவைப்படும் போதெல்லாம், தனிப்பட்ட தகவலைக் கேட்கும்போது உங்களுக்கு விருப்பத்தேர்வுகளை வழங்குவோம். உங்கள் விருப்பத்தேர்வுகள் குறித்த மேலும் தகவலுக்கு, குறிப்பிட்ட சேவைகளுக்கான தனியுரிமை அறிக்கைகள் அல்லது FAQ -க்களைக் காணலாம்.
- தனிப்பட்ட தகவலை எங்களுக்கு அளிக்காமல் நிராகரிக்கலாம் மற்றும்/அல்லது உங்கள் உலாவியில் குக்கீகளை ஏற்க மறுக்கலாம், இதன் விளைவாக எமது சில அம்சங்கள் அல்லது சேவைகள் சரியாக இயங்காமல் போவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.
- நியாயமானதாகத் தோன்றும் போதெல்லாம், கோரிக்கையின் அடிப்படையில் உங்கள் தகவலை அணுகுவதற்கும், துல்லியமற்றதாக இருக்கும் பட்சத்தில் சில தரவை நீங்கள் சரிசெய்வதற்கும் மற்றும் அவற்றை நீக்கவும், நம்பிக்கையின் அடிப்படையில் அணுகல் வழங்குவோம்.
- முழு தனியுரிமைக் கொள்கையில் மேலும் அறிக.
கூடுதல் தகவல்
குறிப்பிட்ட Google சேவைகளைப் பற்றிய தகவலுக்கு, இடதுபுறம் உள்ள வழிசெலுத்தல் பட்டியில் காணப்படும் தொடர்புடைய தனியுரிமை அறிக்கையைக் காணவும் அல்லது Google உதவிப் பக்கத்தில் பார்க்கவும். EU/US பாதுகாப்பு ஹார்பர் திட்டத்தில் Google உறுப்பினராக உள்ளது.
எங்கள் தனியுரிமை நடவடிக்கைகள் குறித்த மேலும் தகவலுக்கு, முழு தனியுரிமைக் கொள்கைக்கு செல்க. உங்கள் தனியுரிமை மற்றும் Google குறித்து கூடுதல் கேள்விகள் இருப்பின், இங்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். Google இன் தனியுரிமைக் கொள்கைக்கு தொடர்பில்லாத கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம் என்பதை கவனத்தில் கொள்க.